குடியரசுத் தலைவர் செயலகம்

இந்தியக் கடற்படையின் 22 ஆவது ஏவுகணை வாகன அணிக்குக் கொடி விருதினை குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted On: 08 DEC 2021 1:42PM by PIB Chennai

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று (டிசம்பர் 8, 2021)  இந்தியக் கடற்படையின் 22-ஆவது ஏவுகணை வாகன அணிக்கு குடியரசுத் தலைவரின் கொடி விருதினைக் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் இந்த சாதனையை அடைந்ததற்காக 22 ஆவது ஏவுகணை வாகன அணியோடு இணைந்துள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.  இந்த அணி நமது நாட்டிற்குக் கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் இதன் அதிகாரிகளாலும், மாலுமிகளாலும் செய்யப்பட்ட மிகச்சிறந்த சேவைக்கான சான்றாக இந்த விருதளிப்பு இருப்பதாக அவர் கூறினார்.

இந்த அணியின் கப்பல்கள், பலவகையான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதைக் குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.  முக்கியமான பணிக்காக   ஈடுபடுத்துதல்  மூலம் இவை நமது கடற்பகுதியின் எல்லைகளைப் பாதுகாத்துள்ளன.  மேலும், ஓமன் வளைகுடா, பாரசீக வளைகுடா பகுதிகளில் தூதரக நிலையிலான இயக்கங்களிலும், கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளிலும் இவை ஈடுபட்டுள்ளன என்று அவர் கூறினார்.

இந்தியா கடல்பகுதி மிகுந்த நாடு என்று கூறிய குடியரசுத் தலைவர், இந்தியக் கடற்படை  நமது வெளிநாட்டுக் கொள்கை மற்றும் தேசநலன்கள் பாதுகாப்பு, வர்த்தக முன்னேற்றம் ஆகியவற்றில் மிகப்பெரிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.

உலகளாவிய கடல் வாணிபம், இந்தியப் பெருங்கடல் பகுதி மூலமாக பெருமளவு நடைபெறுவதாக அவர் கூறினார்.  எனவே, இந்தப் பகுதியில் அமைதியை பராமரிப்பது நமக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கும் மிக முக்கியமானதாகும்.  உலகின் மிகப்பெரிய கடற்படைகளில் ஒன்றான இந்திய கடற்படையை இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு கூட்டாளியாக அண்டை நாடுகளும் எதிர்பார்க்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779177

••••••••••••••••



(Release ID: 1779305) Visitor Counter : 202