பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவ துணை தளபதி சி.பி.மொகந்தி கத்தார் புறப்பட்டார்
Posted On:
08 DEC 2021 9:12AM by PIB Chennai
ராணுவ துணை தளபதி, லெப்டினன்ட் ஜெனரல், சி.பி.மொகந்தி இரண்டு நாள் பயணமாக கத்தாருக்குச் சென்றுள்ளார். 2021 டிசம்பர் 08 முதல் 09 வரையிலான இந்த பயணத்தில் கத்தார் பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரிகளுடன் பல சந்திப்புகள் மூலம் கத்தார்-இந்தியா இடையிலான சிறந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை துணைத் தலைவர் மேலும் முன்னெடுத்துச் செல்வார்.
ராணுவ துணை தளபதி, கத் தார் பாதுகாப்பு விவகாரங்கள் அமைச்சர், தலைமைப் பணியாளர்கள், கத்தார் ஆயுதப் படைகள், கத்தார் எமிரி நிலப் படைகளின் (QELF) தளபதி மற்றும் அஹ்மத் பின் முகமது இராணுவக் கல்லூரியின் கமாண்டன்ட் ஆகியோரை சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார் இந்த பயணத்தின் முக்கிய அம்சம், கத்தாரின் முன்னணி பாதுகாப்புத் துறைகளின் மூத்த தலைவர்களுடனான சந்திப்பாகும். இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.
(Release ID: 1779110)
Visitor Counter : 171