பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
அரசியலில் உள்ள பெண்களுக்கான அகில இந்திய திறன் வளர்த்தல் திட்டத்தை தேசிய மகளிர் ஆணையம் தொடக்கம்
Posted On:
07 DEC 2021 2:36PM by PIB Chennai
பெண் அரசியல் தலைவர்களின் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்காக, அனைத்து மட்டங்களிலும் உள்ள பெண் பிரதிநிதிகளுக்கான 'அவள் ஒரு மாற்றம் செய்பவள்' என்ற அனைத்திந்திய திறன் மேம்பாட்டு திட்டத்தை தேசிய மகளிர் ஆணையம் இன்று அறிமுகப்படுத்தியது.
பெண் அரசியல் தலைவர்களின் முடிவெடுக்கும் திறன், பேச்சு, எழுதுதல் போன்ற தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் பிராந்திய வாரியான பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து திறன் மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படும்.
மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் உள்ள ராம்பாவ் மஹால்கி பிரபோதினியுடன் இணைந்து ‘அவள் ஒரு மாற்றம் செய்பவள்’ தொடரின் கீழ் பயிற்சி நிகழ்ச்சிகளின் அதிகாரப்பூர்வ துவக்கம் இன்று நடைபெற்றது.
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி ரேகா ஷர்மா இந்த நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். 'நகராட்சிகளில் உள்ள பெண்களுக்கான' மூன்று நாள் திறன் மேம்பாட்டு திட்டம் டிசம்பர் 7 முதல் 9 வரை ஏற்பாடு செய்யப்படும்.
விழாவில் பேசிய திருமதி ஷர்மா, அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பது காலத்தின் தேவை என்றும், நாடாளுமன்றத்தை நோக்கிய அவர்களின் பயணத்தில் அவர்களுக்கு உதவ ஆணையம் உறுதி பூண்டுள்ளது என்றும் கூறினார்.
“அரசியலில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த திட்டம் பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பெண்களின் வாழ்க்கையில் ‘அவள் ஒரு மாற்றம் செய்பவள்’ திட்டம் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார் திருமதி ஷர்மா.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778787
-----
(Release ID: 1778787)
(Release ID: 1779031)
Visitor Counter : 1014