உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் தொந்தரவு இல்லாத, வரிசை இல்லாத மற்றும் வசதியான விமானப் பயணத்தை வழங்குவதை ஏர் சுவிதா நோக்கமாக கொண்டுள்ளது
Posted On:
07 DEC 2021 12:21PM by PIB Chennai
இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு வசதி அளிக்கும் நோக்கில், ஏர் சுவிதா தளத்தில் தொடர்பில்லா சுய அறிவிப்பை விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளன.
ஆகஸ்ட் 2020-ல் தொடங்கப்பட்ட ஏர் சுவிதா தளம், 30 நவம்பர் 2021 அன்று வெளியிடப்பட்ட பயண வழிகாட்டுதல்களுக்கு இடமளிக்கும் வகையில் இப்போது பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சர்வதேச பயணிகளின் வருகையை எளிதாக்கும் வகையில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட இந்தத் தளம்,, ஆர்டிபிசிஆர், தடுப்பூசி நிலை போன்றவற்றுடன் பயணிகளின் பயணம் மற்றும் தங்கும் விவரங்களை வழங்குவதற்கு உதவுகிறது.
இந்தியாவிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் தொந்தரவு இல்லாத, வரிசை இல்லாத மற்றும் வசதியான விமானப் பயணத்தை வழங்குவதை ஏர் சுவிதாவின் அமலாக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நவம்பர் 30, 2021 அன்று புதிய பயண வழிகாட்டுதல்கள் புதுப்பிக்கப்பட்டதில் இருந்து டிசம்பர் 1, 2021 முதல் டிசம்பர் 5, 2021 வரை 2,51,210 பயணிகளுக்கு ஏர் சுவிதா தளம் ஏற்கனவே உதவி செய்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 2020-ல் ஏர் சுவிதா தளம் தொடங்கப்பட்டதில் இருந்து 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயனடைந்துள்ளனர்.
கொவிட்-19 வைரஸின் ஒமைக்ரான் வகையை தடுப்பதை உறுதி செய்வதற்காக ஏர் சுவிதா தளத்தில் இருந்து விலக்கு படிவங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் விவரங்களை நிரப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778735
(Release ID: 1778955)
Visitor Counter : 222