நித்தி ஆயோக்

நகராட்சி திடக்கழிவு மேலாண்மையில் சிறந்த நடைமுறைகளின் தொகுப்பை நிதி ஆயோக் மற்றும் சிஎஸ்ஈ வெளியிட்டன

Posted On: 07 DEC 2021 12:18PM by PIB Chennai

கழிவு-வாரியாக நகரங்கள்: நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மையில் சிறந்த நடைமுறைகள்’ எனும் இந்திய நகரங்கள் திடக்கழிவுகளை எவ்வாறு நிர்வகிக்கின்றன என்பதற்கான விரிவான தகவல் களஞ்சியத்தை நிதி ஆயோக் துணை தலைவர் திரு ராஜீவ் குமார், தலைமை செயல் அலுவலர் திரு அமிதாப் காந்த் மற்றும் சிறப்புச் செயலாளர் திரு கே ராஜேஸ்வர ராவ் ஆகியோரால் டிசம்பர் 6 அன்று வெளியிடப்பட்டது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் தலைமை இயக்குநர் திருமிகு சுனிதா நரேன் உடன் இருந்தார்.

இந்தியாவின் திடக்கழிவு மேலாண்மைத் துறை கடந்த சில ஆண்டுகளில் இணையற்ற வளர்ச்சியைக் கண்டுள்ளது. தூய்மை இந்தியாவுக்கான முயற்சிகளை மேலும் வலுப்படுத்த தூய்மை இந்தியா இயக்கத்தின் 2-ம் கட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, இந்தியாவின் 15 மாநிலங்களில் உள்ள 28 நகரங்களில் இருந்து சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்துகிறது. இது நிதி ஆயோக் மற்றும்  அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் இணைந்து நடத்திய நாடு தழுவிய ஆய்வு மற்றும் கணக்கெடுப்பின் விளைவாகும்.

நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் பேசுகையில், "இந்திய வளர்ச்சியின் எதிர்காலத்தைப் பார்க்கும்போது, ​​பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாக நகரங்கள் இருக்கும், நகரங்களில் திறமையான கழிவு மேலாண்மை அமைப்புகளை செயல்படுத்துவது மிகவும் முக்கியமானது,” என்றார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமிதாப் காந்த், திடக்கழிவுகளை திறம்பட மேலாண்மை செய்வது விரைவான நகரமயமாக்கலில் இந்தியாவின் முக்கிய சவாலாக இருக்கும் என்றார். கழிவு மேலாண்மையில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

டாக்டர் கே ராஜேஸ்வர ராவ் கூறுகையில், கழிவு மேலாண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்த நாடு முழுவதும் உள்ள 28 நகரங்களின் வெற்றிக் கதைகளைத் தொகுக்கும் அறிவுக் களஞ்சியமாக இந்தப் புத்தகம் உள்ளது என்றார்.

முழு அறிக்கையை இங்கு காணலாம்:  https://www.niti.gov.in/sites/default/files/2021-12/Waste-Wise-Cities.pdf

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778734



(Release ID: 1778917) Visitor Counter : 238