பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் மற்றொரு முக்கியமான மைல்கல்லைக் கடந்திருப்பது குறித்துப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
Posted On:
06 DEC 2021 10:35AM by PIB Chennai
இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் மற்றொரு முக்கியமான மைல்கல்லைக் கடந்திருப்பது குறித்துப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியாவின் மக்கள் தொகையில் தகுதியானவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு இப்போது முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் டுவிட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;
"இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் மற்றொரு முக்கியமான மைல்கல்லைக் கடந்துள்ளது கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த இந்த வேகத்தைத் தொடர்ந்து பராமரிப்பது முக்கியமாகும்.
மேலும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொவிட்-19 தொடர்பான இதர அனைத்து விதிமுறைகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். "
***
(Release ID: 1778391)
Visitor Counter : 228
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam