எரிசக்தி அமைச்சகம்
31-வது தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள் மற்றும் 1வது தேசிய எரிசக்தி சிக்கன கண்டுபிடிப்பு விருதுகளை எரிசக்தி சிக்கன அமைப்பு அறிவித்துள்ளது
Posted On:
04 DEC 2021 1:38PM by PIB Chennai
ஆண்டுதோறும் டிசம்பர் 14-ந் தேதி தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதலுடன் செயல்படும் எரிசக்தி சிக்கன அமைப்பு, தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள், தங்களது எரிசக்தி பயன்பாட்டைக் குறைத்திருப்பதை அங்கீகரித்து, ஊக்கப்படுத்தும் விதமாக , தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகளை (தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகளை (NECA) அறிவித்துள்ளது. இந்த ஆண்டு புதிதாக, தேசிய எரிசக்தி சிக்கன கண்டுபிடிப்பு விருதும் (NEEIA) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, “விடுதலைப் பெருவிழா” -வின் ஒரு பகுதியாக, NECA மற்றும் NEEIA விருதுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர், 14 டிசம்பர், 2021 அன்று நடைபெற உள்ள தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தன்று, முக்கியப் பிரமுகர்களால் விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.
மேல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777979
(Release ID: 1778051)