சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
12வது இந்திய உறுப்புதான தினக் கொண்டாட்டம்: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் தலைமை தாங்கினார்
Posted On:
27 NOV 2021 2:10PM by PIB Chennai
“Jeete ji Raktdaan, Marne ke baad Angadaan: This should be the motto of our life.”
‘‘உயிரோடு இருக்கும்போது இரத்த தானம், மரணத்துக்குப்பின் உறுப்பு தானம்: இதுவே நமது வாழ்க்கையின் லட்சியமாக இருக்க வேண்டும்’’ என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
12வது இந்திய உறுப்புதான நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இறந்தவர்களின் உறுப்புகளை தானம் அளிக்க சம்மதம் தெரிவித்த குடும்ப உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:
நமது கலாச்சாரம், நல் அதிரஷ்டத்தை வலியுறுத்துகிறது. தனிநபரின் நலன் , சமுதாய நலனுடன் இணைந்துள்ளது. 12வது இந்திய உறுப்பு தான தினத்தில் பங்கேற்பது எனக்கு கிடைத்த பெருமை. இந்த நாள் உறுப்பு தானம் அளிப்பதை கொண்டாடுகிறது.
2010ம் ஆண்டு முதல், இந்திய உறுப்பு தான தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாப்படுகிறது. இதில் உறுப்புதானம் அளித்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பங்களிப்புகள் போற்றப்படும்.
குஜராத்தின் ஜாம்நகரைச் சேர்ந்த தீபக் என்பவர் உறுப்பு தானம் செய்துள்ளார். அவரது தந்தை உறுப்பு தானம் அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். மற்றவர்களையும் உறுப்பு தானம் செய்ய, அவர் அறிவுறுத்துகிறார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, உறுப்புகளுக்குப் பற்றாக்குறை நிலவும் தகவலையும் அவர் பரப்புகிறார்.
உறுப்புகள் தானம் பற்றிய தயக்கத்தைப் போக்க சமூகம், மருத்துவர்கள், அரசுகள் மற்றும் ஊடகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நாடு முழுவதும் உறுப்பு தானம் செய்வதை அதிகரிக்க வேண்டும் என அவர் கூறினார்.
‘‘பொது நலனுடன் இருப்பதற்கும், சமூகத்திற்கு திருப்பி அளிக்கவும், இயற்கை வழங்கியுள்ள மற்றொரு முயற்சி உறுப்பு தானம்’’ என அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775562
••••
(Release ID: 1775664)
Visitor Counter : 218