பாதுகாப்பு அமைச்சகம்

73-வது ஆண்டு நிறுவன தினத்தை தேசிய மாணவர் படை கொண்டாடுகிறது

Posted On: 27 NOV 2021 2:27PM by PIB Chennai

உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பான தேசிய மாணவர் படை, நவம்பர் 28, 2021 அன்று அதன் 73-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், நவம்பர் 27, 2021 அன்று புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அணிவகுப்புகள், ரத்த தான முகாம்கள் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் தேசிய மாணவர் படை நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டில், கொவிட்-19 காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை திறம்பட செயல்படுத்தியுள்ளது. பெருந்தொற்றை நிர்வகிப்பதில் பல்வேறு முன்முயற்சிகள் மூலம் தேசிய மாணவர் படையின் பங்களிப்பு நாடு முழுவதும் உள்ள மக்களால் பரவலாகப் பாராட்டப்பட்டது.

ஒரே பாரதம், ஒப்பற்ற பாரதம்’, ‘தற்சார்பு இந்தியா’ மற்றும் ‘ஃபிட் இந்தியா’ ஆகியவற்றில் கலந்து கொண்டு தேசிய மாணவர் படையினர் மற்றும் அலுவலர்கள் முன்னுதராணமாக திகழ்ந்தனர். தூய்மை இயக்கம், டிஜிட்டல் எழுத்தறிவு, யோகா தினம், மரம் நடுதல், தடுப்புமருந்து விழிப்புணர்வு ஆகியவற்றிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

நாட்டின் எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில் தேசிய மாணவர் படையை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை ஆகஸ்ட் 15, 2020 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தை தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளிலும் மொத்தம் ஒரு லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 19, 2021 அன்று ஜான்சியில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் என்சிசி முன்னாள் மாணவர் சங்கம் பிரதமரால் தொடங்கப்பட்டது, இதன் முதல் உறுப்பினராக திரு நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். இந்த சங்கத்தின் இரண்டாவது உறுப்பினராக பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775564

****



(Release ID: 1775652) Visitor Counter : 265