குடியரசுத் தலைவர் செயலகம்
கான்பூரில் சவுத்ரி ஹர்மோகன் சிங் யாதவ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு
Posted On:
24 NOV 2021 2:09PM by PIB Chennai
கான்பூரில் இன்று நடைபெற்ற சவுத்ரி ஹர்மோகன் சிங் யாதவ் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில், குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், சவுத்ரி ஹர்மோகன் சிங் யாதவின் வாழ்க்கை, வருங்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என்றார். எளிமைக்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்ந்த அவர், பொது சேவைக்கும் ஊக்கமளிக்கக்கூடியவர். ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்த அரும்பாடுபட்டவர் அவர் என்றும் குடியரசுத் தலைவர் புகழாரம் சூட்டினார். கிராம சபை முதல் மாநிலங்களவை வரை வேளாண்மை தொடர்பான அவரது கருத்துக்கள் உன்னிப்பாக கேட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஹர்மோகன் சிங்கின் வீடு அனைவருக்கும் எப்போதும் திறந்தே இருந்ததாக குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், 1984 ஆம் ஆண்டு வன்முறை கும்பலிடம் இருந்து ஏராளமான மக்களின் உயிரை காப்பாற்றியதன் மூலம், சமூக நல்லிணக்கத்திற்கு மிகச்சிறந்த உதாரணத்தை உருவாக்கியவர் என்றும் தெரிவித்தார். 1991 ஆம் ஆண்டு அவரது வீரதீர மற்றும் அச்சமற்ற சேவைக்காக சௌரிய சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774540
****
(Release ID: 1774763)
Visitor Counter : 241