கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
ஹால்டியா துறைமுக வளாகத்தில் பல்வேறு திட்டங்களை திரு. சாந்தனு தாக்கூர் தொடங்கி வைத்தார்; இணையில்லாத வகையில் இந்திய நீர்வழிப்பாதை விரிவாகி வருகிறது என்று அவர் கூறினார்
Posted On:
22 NOV 2021 9:35AM by PIB Chennai
கொல்கத்தா சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தின் ஹால்டியா கப்பல்துறை வளாகத்தில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை இணை அமைச்சர் திரு. சாந்தனு தாக்கூர் பல திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். அவையாவன
- மேம்படுத்தப்பட்ட வெள்ள நீர் அகற்றல் & சாலைகள் அகலப்படுத்துதல்
- 41000 சதுர மீட்டர் சரக்கு கையாளும் பகுதியை துறைமுகத்துடன் இணைத்தல்
- துறைமுக விருந்தினர் மாளிகையை மேம்படுத்துதல் மற்றும் தோட்டத்தை அலங்கரித்தல்
- துறைமுக மருத்துவமனையில் புதிய தீவிர சிகிச்சை பிரிவு & அவசர சிகிச்சை பிரிவு.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. தாக்கூர், இந்திய நீர்வழிப் பாதை அமைப்புகள் எந்த நாடும் ஈடு செய்ய முடியாத வேகத்தில் விரிவடைந்து வருகின்றன என்று கூறினார்.
துறைமுக தலைவர் திரு.வினித் குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 1773854)
(Release ID: 1773890)
Visitor Counter : 261