தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சாதிக்க விரும்பும் இயக்குநர்கள் தங்கள் கதைகளின் மீது வலுவான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்: 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் மதுர் பண்டார்கர்
ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்க விரும்பும் இயக்குநர்கள் தங்கள் கதைகளின் மீது உறுதியான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தேசிய விருது பெற்ற இயக்குநர் திரு மதுர் பண்டார்கர் கூறினார்.
52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற 'திரைப்பட உருவாக்கம்' குறித்த மாஸ்டர் கிளாஸ் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.
பண்டார்கர் மேலும் கூறுகையில், “எனது படத்தின் கரு எப்போதும் என்னிடமிருந்து தான் உருவாகிறது. நான் என்னையும் என் கதைகளையும் நம்புகிறேன். ஒரு கதையில் எனக்கு உறுதியான நம்பிக்கை கிடைத்தால், மட்டுமே நான் படமெடுக்க செல்கிறேன்,” என்றார்.
"கலை மற்றும் வணிகப் படங்களுக்கு இடையே சமநிலையை பராமரிக்கவும், யதார்த்தமான கதைக்களத்தின் அடிப்படையில் ஈர்க்கக்கூடிய திரைப்படங்களை உருவாக்கவும் நான் எப்போதும் முயற்சி செய்கிறேன்" என்று அவர் கூறினார்.
சினிமா ரசிகர்களுடன் உரையாடிய அவர், "இந்நாட்களில் ஓடிடி தளங்கள் ஆர்வமுள்ள இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குகின்றன" என்று கூறினார்.
மாஸ்டர் கிளாஸின் நெறியாளராக பிரபல திரைப்பட விமர்சகர் திரு தரண் ஆதர்ஷ் இருந்தார். திரு மதுர் பண்டார்கர் மற்றும் திரு தரண் ஆதர்ஷை தேசிய விருது பெற்ற இயக்குநர் திரு நிலா மதாப் பாண்டா நிகழ்ச்சியின் நிறைவில் கவுரவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773734
-----
(Release ID: 1773788)
Visitor Counter : 218