தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
தமிழகத்தில் இருந்து 4 பேர் மற்றும் 7 பெண்கள் உள்பட ‘75 நாளைய இளம் படைப்பாளிகள்’ வெற்றியாளர்களை அறிவித்தது 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா.
நாட்டின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் இளைய தலைமுறையினரின் திறனை வெளிக்கொணரும் முயற்சியாக ‘75 நாளைய இளம் படைப்பாளிகள்’ போட்டியின் வெற்றியாளர்கள் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று அறிவிக்கப்பட்டனர்.
இதில் தமிழகத்தில் இருந்து 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இயக்கம், படத்தொகுப்பு, பாடல், திரைக்கதை உள்ளிட்ட திரைப்பட உருவாக்கத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வளரும் திறமைகள் போட்டி மதிப்பீட்டின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் தாகூரின் சிந்தனையில் விளைந்த புதுமையான முயற்சியே ‘75 நாளைய இளம் படைப்பாளிகள்’ போட்டி ஆகும். இதன் மூலம் திரைத்துறையின் நாளைய தலைவர்களுக்கான தளத்தை இந்திய சர்வதேச திரைப்பட விழா வழங்குகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 75 நபர்களில் ஏழு பெண்களும் அடங்குவர். இந்த புதுமையான முயற்சி குறித்துப் பேசிய அமைச்சர், “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வேளையில், முதன்முறையாக, 75 இளம் படைப்பாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறோம். மிக நுணுக்கமானத் தேர்வு செயல்முறைக்குப் பிறகு நடுவர் குழுவால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
திரைப்பட இயக்கத் திறமைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பீகாரைச் சேர்ந்த 16 வயதான ஆர்யன் கான் தான் இந்த பட்டியலில் மிகவும் இளைய வயதுடையவர் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1773530
****
(Release ID: 1773553)
Visitor Counter : 309