தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தலைமை முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் வாரியத்தின் 229-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

Posted On: 20 NOV 2021 3:00PM by PIB Chennai

வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தலைமை முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் வாரியத்தின் 229-வது கூட்டம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் திரு சுனில் பர்த்வால், மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரும் உறுப்பினர் செயலருமான திரு முக்மீத் எஸ் பாட்டியா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்காணும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன:

* பணியாளர்கள், முதலாளிகள் மற்றும் அரசு தரப்பில் இருந்து வாரியத்தின் உறுப்பினர்களை உள்ளடக்கிய நான்கு துணைக் குழுக்களை அமைப்பது.

* 2020-21-ம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பின் செயல்பாடு குறித்த வரைவு 68-வது ஆண்டு அறிக்கையை, மத்திய அரசின் மூலம் நாடாளுமன்றத்தின் முன் வைக்க ஒப்புதல்.

* சி-டாக் மூலம் மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளை மேம்படுத்துவதற்கு ஒப்புதல்.

* இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட முதலீட்டு மாதிரியில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து சொத்து வகைகளிலும் முதலீடு செய்வது குறித்து முடிவெடுக்க நிதி முதலீடு மற்றும் தணிக்கைக் குழுவிற்கு அதிகாரம் வழங்க வாரியம் முடிவு செய்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773459

 

-----


(Release ID: 1773483)