பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள், சமையற்கலை மற்றும் கலாச்சார பாராம்பரியத்தை எடுத்துக் காட்டுகிறது பழங்குடியினர் கவுரவ தின கொண்டாட்டம்

Posted On: 20 NOV 2021 12:25PM by PIB Chennai

பழங்குடியினர் கவுரவ தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள கடந்த 15ம் தேதி தொடங்கின. இது நாடு முழுவதும் பழங்குடியினரின் கலாச்சாரங்களை எடுத்துக் காட்டுகிறது

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒருபகுதியாக, பழங்குடியினர் கவுரவ தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர் பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த தினமான நவம்பர் 15ம் தேதி, பழங்குடியினர் கவுரவ தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படவுள்ளது

கொண்டாடப்படாத பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், பழங்குடியின தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் தில்லியில் நடந்து வருகின்றன.

பகவான் பிர்சா முண்டாவின் பேரன் திரு.சுக்ராம் முண்டா, தில்லி ஹாத்தில் நடைபெறும் தேசிய பழங்குடியின விழாவை தொடங்கி வைத்தார். இது நவம்பர் 30ம் தேதி வரை நடைபெறும்இந்த விழாவில் பழங்குடியின கைவினைப் பொருட்கள், உணவுகள் மற்றும் பழங்குடியின சமுதாயத்தினரின் பாரம்பரியங்கள் வெளிப்படுத்துகின்றனஇங்கு நடைபெறும் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட அரங்குகளில், கையால் பின்னப்பட்ட ஆடைகள், பட்டாடைகள், நகைகள், மற்றும் உணவு வகைகள் போன்ற  பழங்குடியினரின் தயாரிப்பு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

 பழங்குடியினர் தயாரிப்பு பொருட்களின்  5 நாள் கண்காட்சியை அகமதாபாத் ஹாத்-ல் குஜராத் அரசு நடத்துகிறது.

மணிப்பூரில் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் சார்பில், 3 நாள் பயிலரங்கை நடத்தியதுஇதில் பழங்குடியினர் கலை மற்றும் ஓவியங்கள் பற்றிய போட்டி நடத்தப்பட்டன. இதேபோல், தெலங்கானா, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் உட்பட பல மாநிலங்களில் பழங்குடியினர் கவுரவ தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773441

-----


(Release ID: 1773456) Visitor Counter : 4377