பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குளிர்காலத்திற்கு இருப்பு வைக்க அதிகளவில் பொருட்களை ஏற்றிச் செல்லும் ஐஏஎஃப் விமானங்கள்

प्रविष्टि तिथि: 17 NOV 2021 12:28PM by PIB Chennai

இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ஆபரேஷன் ஹெர்குலஸ் என்னும் கூட்டு நடவடிக்கையை நவம்பர் 15-ந் தேதி மேற்கொண்டன. குளிர் காலத்தில் இருப்பு வைப்பதற்காக வடபகுதிக்கு அதிக அளவில் விரைவாக பொருட்கள் விநியோகத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இந்த விநியோகத்திற்கு சி-17, ஐஎல்76, ஏஎன்-32,  ரக விமானங்கள் மேற்கு பிராந்திய விமானப்படைத் தளத்திலிருந்து இதற்காக புறப்பட்டுச் செல்கின்றன. கடந்த காலங்களில் தளவாடங்கள் மற்றும் பொருட்களை விரைவாக ஏற்றிச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்திய விமானப்படையின் பொருள் ஏற்றிச் செல்லும் திறனை வெளிகாட்டும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

•••••


(रिलीज़ आईडी: 1772584) आगंतुक पटल : 297
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali