பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு கல்வி & ஆய்வு நிறுவனத்திற்கு மறைந்த மனோகர் பரிக்கர் பெயரை சூட்டும் கல்வெட்டை பாதுகாப்பு அமைச்சர் திறந்து வைத்தார்

Posted On: 15 NOV 2021 1:15PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு. நிறுவனத்திற்கு மறைந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் திரு மனோகர் பரிக்கர் பெயரை சூட்டும் கல்வெட்டை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2021 நவம்பர் 15 அன்று திறந்து வைத்தார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு தமது உரையில் அஞ்சலி செலுத்திய திரு சிங், மறைந்த மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் இந்நிறுவனத்தின் பணிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார் என்றார்.

உள்நாட்டு உற்பத்தி மீது பரிக்கர் காட்டிய ஈடுபாடு மற்றும் அரசியல்-ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான அவரது முயற்சிகள் நாட்டின் மதிப்புமிக்க சொத்தாக அவரை ஆக்கியதாக திரு சிங் கூறினார்.

மனோகர் பரிக்கர் பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு அதன் 57-வது நிறுவன தினத்தில் தமது வாழ்த்துகளை தெரிவித்த திரு ராஜ்நாத் சிங், தேச பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகள் உள்ளிட்ட துறைகளில் கடந்த சுமார் ஆறு தசாப்தங்களாக சிறந்த சிந்தனைக் களமாக உருவெடுத்துள்ள நிறுவனத்தின் கடின உழைப்பையும் உறுதியையும் பாராட்டினார்.

 

கல்வி, பல்வேறு ஆராய்ச்சி துறைகள் மற்றும் பல நாடுகளின் அரசுத் துறைகளில் உள்ள திறமைகளை ஒன்றிணைத்துள்ள ஒரு தனித்துவமான நிறுவனம் இது என்று அவர் விவரித்தார்.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில், தேசிய பாதுகாப்பு சார்ந்த துறைகளில் இன்னும் ஆழமாக கவனம் செலுத்துமாறு நிறுவனத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்புக்கு நிறுவனம் புதிய திசையை வழங்க முடியும் என்று அவர் கூறினார்.

வேகமாக மாறி வரும் சர்வதேச பாதுகாப்பு நிலவரம் மற்றும் கொவிட்-19 போன்ற அச்சுறுத்தல்களுக்கு இடையே இன்னும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் திட்டங்கள் தொடர்பான பரந்த அளவிலான ஆராய்ச்சிக் கருப்பொருள்களை உள்ளடக்கிய, நிறுவனத்தின் அறிஞர்களால் எழுதப்பட்ட புத்தகங்களையும் அமைச்சர் வெளியிட்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771900

 

****



(Release ID: 1772012) Visitor Counter : 179