கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அம்ரித் மஹோத்சவத்தின் ஒரு பகுதியாக சர் பிரதாப் சிங் கோப்பை 2021 போலோ விளையாட்டின் இறுதிப் போட்டியை கலாச்சார அமைச்சகம் நடத்துகிறது

Posted On: 13 NOV 2021 4:50PM by PIB Chennai

75 ஆண்டு கால சுதந்திரம் மற்றும் இந்தியாவின் புகழ்பெற்ற கலாச்சார வரலாற்றை விடுதலையின் அம்ரித் மஹோத்சவம் மூலம் கொண்டாடடி வருவதன் ஒரு பகுதியாக, எம்.பி. கோப்பை போலோ சாம்பியன்ஷிப் - சர் பிரதாப் சிங் கோப்பை 2021-ஐ கலாச்சார அமைச்சகம் நடத்துகிறது.

நவம்பர் 14, 2021 அன்று ஜெய்ப்பூர் போலோ மைதானத்தில் இறுதி  போட்டியை கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி தொடங்கி வைப்பார்.

இந்திய போலோ சங்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு  ஜஸ்ட் இன் டைம் ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளையால் ஆதரிக்கப்படுகிறது. 1921-ல் நிறுவப்பட்ட  சர் பிரதாப் சிங் கோப்பை இந்தியாவின் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் முதன்மையான போட்டிகளில் ஒன்றாகும்.

சர் பிரதாப் சிங் கோப்பை 2021-ன் இறுதிப் போட்டியை பாதுகாப்புப் படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே, ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் இதர மூத்த அதிகாரிகள் காண உள்ளனர். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியாவுக்கான தூதர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1771452 

*********


(Release ID: 1771475) Visitor Counter : 155