மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ராஜதந்திர மாநாட்டில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், கல்வியை சர்வதேசமயமாக்குவது குறித்த அரசின் பார்வையை கோடிட்டுக் காட்டினார்

Posted On: 12 NOV 2021 2:42PM by PIB Chennai

சண்டிகர் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த ராஜதந்திர மாநாட்டில் மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைதல் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று பங்கேற்றார்.

கூட்டத்தில் உரையாற்றிய திரு பிரதான், உலகின் அறிவு மையமாக திகழ்வதில் இந்தியாவின் வலிமை மற்றும் கொவிட்டுக்குப் பிந்தைய புதிய உலகில் இந்தியாவின் இடத்தை வடிவமைப்பதில் கல்வியின் பங்கு பற்றி பேசினார்.

இந்திய கல்வி முறை குறித்த லட்சியத்தை எடுத்துரைத்த அமைச்சர்,

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் மூலம் கொள்கை வடிவமைப்பை செயல்படுத்துதல், தரமான கல்வி நிறுவனங்கள், பல்முனை கலாச்சாரத்துடன் கூடிய சமூக உள்ளடக்கல் உள்ளிட்டவையும், புதுமை, தொழில்முனைவு மற்றும் சர்வதேசமயமாக்கல் ஆகியவற்றின் மீதான கவனமும் இந்தியாவின் கல்வி முறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று கூறினார்.

வசுதைவக் குடும்பகம்எனுன் இந்தியாவின் பழங்கால நம்பிக்கையைப் பற்றி குறிப்பிட்ட அவர், உலகளாவிய குடிமக்களை தயார்படுத்துவதற்கும், பொதுவான உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும் பொதுவான இலக்குகளை அடைவதற்கும் பொதுவான புரிதலுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் அழைப்பு விடுத்தார்.

மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டது குறித்து மகிழ்ச்சி அடைவதாக திரு பிரதான் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1771168&RegID=3&LID=1 

-----



(Release ID: 1771228) Visitor Counter : 142