தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
75 வருங்கால படைப்பாளர்களுக்கான பிரம்மாண்டமான தேர்வுக் குழுவினர் பட்டியல் அறிவிக்கப்பட்டது
மனோஜ் பாஜ்பாய், ரசூல் பூக்குட்டி, ஷங்கர் மகாதேவன் போன்ற திரைத்துறை முன்னோடிகளைக் கொண்ட பிரம்மாண்டத் தேர்வுக் குழுவின் ஒரு பகுதியாக பங்கேற்கின்றனர்.
“ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின்” கீழ் நாட்டில் உள்ள இளம் படைப்பாளிகள் மற்றும் வளரும் திறமையாளர்களை ஊக்குவித்து அங்கீகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய சர்வதேச திரைப்பட விழா நாடு முழுவதும் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியது. அவர்களில் 75 படைப்பாற்றல் திறமை உள்ளவர்கள் 52வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட '75 வருங்கால படைப்பாளர்கள்', இந்தியாவின் 52வது சர்வதேச திரைப்பட விழா, கோவா 2021 இல் கலந்துகொள்ள அனைத்து முதன்மை வகுப்புகள்/உரையாடல் அமர்வுகள் மற்றும் பிற செயல்பாடுகளுடன் திரைத்துறை முன்னோடிகளுடன் தொடர்புகொள்வதற்கும் அழைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு படைப்பாளியின் பயணம் மற்றும் தங்குமிடத்தையும் இந்திய சர்வதேச திரைப்பட விழா குழுவே ஏற்கும்.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், 75 வருங்கால படைப்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரம்மாண்டத் தேர்வுக் குழுவினரை இன்று அறிவித்துள்ளது. தேர்வுக் குழுவினரின் விவரங்களை பின் வரும் இணையதளத்தில் https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1771174 காண்க.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர், அக்டோபர் 22ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள வளரும் திறமையாளர்களுக்கு முக்கிய சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்துறையுடன் இணைவதற்கு ஒரு தளத்தை வழங்கும் என்று கூறியிருந்தார். அதன்படி இளைஞர்கள் நாடு முழுவதும் உள்ள இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான போட்டி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். போட்டியானது 75 இளம் திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், பாடகர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் பிறருக்கு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வில் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி நவம்பர் 1, 2021 ஆகும்.
*****
(Release ID: 1771212)
Visitor Counter : 225