நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021-22 காரிஃப் பருவத்தில் நெல் கொள்முதல் மூலம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 11.57 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்

Posted On: 09 NOV 2021 2:02PM by PIB Chennai

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது 2021-22 காரிஃப் சந்தைப்படுத்தல் பருவத்தில் 2021 நவம்பர் 8 வரை 209.52 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது.

சண்டிகர், குஜராத், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்திரகாண்ட், தெலங்கானா, ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து செய்யப்பட்ட கொள்முதல்கள் மூலம் சுமார் 11.57 லட்சம் விவசாயிகள் ரூ 41,066.80 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலம் பயனடைந்துள்ளனர்.

2021-22 காரிஃப் சந்தைப்படுத்தல் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் முந்தைய ஆண்டுகளைப் போலவே சீராக முன்னேற்றமடைந்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு, கீழ்காணும் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1770265 

*******


(Release ID: 1770395) Visitor Counter : 240