உள்துறை அமைச்சகம்

பத்ம விருதுகளை வென்றவர்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு

Posted On: 08 NOV 2021 7:53PM by PIB Chennai

பத்ம விருதுகளை வென்றவர்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். பத்ம விருதுகளை பொதுமக்களின் விருதுகளாக மாற்றுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இயங்கி வரும் மத்திய அரசின் உண்மையான பிரத்தியேக முயற்சி இது என்று அவர் கூறினார்.

இதுகுறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "எமர்ஜென்சியை எதிர்ப்பதில் இருந்து பல்வேறு பதவிகளின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியது வரை காலம் சென்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் வாழ்க்கை நாட்டிற்கு ஆற்றும் தன்னலமற்ற சேவையின் சிறப்பான அடையாளமாகும். திரு மோடி அரசால் அவருக்கு பத்ம விபூஷண் வழங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும்," என்று கூறியுள்ளார்.

"சட்டம், நிதி மற்றும் இதர துறைகளில் தமது ஞானம் மற்றும் அனுபவத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு நினைவு கூறத்தக்க பங்கை காலம் சென்ற அருண் ஜேட்லி அவர்கள் ஆற்றினார். அவருக்கு பத்மவிபூஷன் கௌரவம் வழங்கியிருப்பது திரு மோடி அரசின் மிகவும் பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பு நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்," என்று திரு அமித் ஷா கூறினார். 

"காலம் சென்ற சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் வாழ்க்கை, பொதுமக்கள் நலன் மற்றும் நாட்டிற்கான சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருந்தது. வெளியுறவுத்துறை அமைச்சராக வெளியுறவு அமைச்சகத்தை பொதுமக்களுடன் இணைத்ததற்காக அவர் நினைவு கூறப்படுவார். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கிற்காக திரு மோடி அரசால் பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது அவருக்கு செலுத்தப்படும் மிகவும் பொருத்தமான அஞ்சலியாகும்," என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

"குஜராத்திற்கு இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள் ஆகும். திரு கஃபூர் பாய் எம் பில்கியா, திருமதி சரிதா ஜோஷி, பேராசிரியர் சுதிர் குமார் ஜெயின், திரு சகாபுதீன் ராத்தோட், டாக்டர் ஹெச் எம் தேசாய், திரு யாஜ்தி நவ்ஷிர்வான் கரஞ்சியா, திரு நாராயண் ஜே ஜோஷி 'கரியால்' மற்றும் டாக்டர் குர்திப் சிங் ஆகியோருக்கு அவர்களது சிறப்பான பங்களிப்புக்காக மோடி அரசால் பத்மஸ்ரீ விருது  வழங்கப்பட்டுள்ளது," என்று மத்திய உள்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1770100

****



(Release ID: 1770127) Visitor Counter : 223