எஃகுத்துறை அமைச்சகம்
வாழ்க்கையின் அனைத்து மட்டத்தையும் சேர்ந்த மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய திரு ராம் சந்திர பிரசாத் சிங்
प्रविष्टि तिथि:
01 NOV 2021 10:55AM by PIB Chennai
மத்திய எஃகுத் துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங், நேற்று நாக்பூரிலுள்ள தேசிய நேரடி வரிகள் பயிற்சி மையத்தைப் பார்வையிட்டார். அந்த மையத்தின் முதன்மைத் தலைமை இயக்குநர் (பயிற்சி) திருமதி ரூபி ஸ்ரீவஸ்தவா மற்றும் பயிற்சி மைய ஆசிரியர்கள் அமைச்சரை வரவேற்றனர்.
31 அக்டோபர் 2021 ஞாயிறு அன்று தேசிய நேரடி வரிகள் பயிற்சி மையத்தை பார்வையிட்ட அமைச்சரை, அந்த வளாகத்திலுள்ள நிர்வாகப் பிரிவு கட்டடத்தின் ஆவனக் காப்பக பிரிவுக்கு அழைத்துச்சென்று சுற்றிக்காட்டினர். இந்த ஆவனக்காப்பகத்தில், வருமான வரித்துறையின் பயிற்சி குறித்த வரலாற்று ஆவனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பின்னர் அமைச்சர் அந்த பயிற்சி மைய வளாகம் முழுவதையும் சுற்றிப் பார்த்தார். பயிற்சி மைய ஆசிரியர்களிடையே உரையாற்றிய மத்திய அமைச்சர், சிறந்த நடைமுறைகள் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1768316
******
(रिलीज़ आईडी: 1768611)
आगंतुक पटल : 253