சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தில்லியில் டெங்கு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆய்வு

Posted On: 01 NOV 2021 1:15PM by PIB Chennai

தில்லியில் டெங்கு நிலவரம் குறித்து ஆராயவும், கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ளவும் தில்லி யூனியன் பிரதேச அரசுடன் உயர்நிலைக் கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். 

ஏழை மக்கள் அதிக பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர் எனக் குறிப்பிட்ட மத்திய அமைச்சர், காய்ச்சல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், உடல் வெப்பநிலையைக் குறைக்கும் மருந்துகளை அளிக்கின்றனர் எனத் தெரிவித்தார். காய்ச்சலுக்கான அடிப்படைக் காரணம் அறியப்படாததால் நோயாளிகள் இறக்க நேரிடுகிறது எனவும் அதனால் டெங்குவை அடையாளம் காண பரிசோதனை மிகவும் முக்கியம் என மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். டெங்குவுக்கான பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு திரு மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டார்.

இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.  சில மருத்துவ மனைகளில் டெங்கு நோயாளிகள் அதிக அளவில் உள்ளனர். சில மருத்துவமனைகள் காலியாக உள்ளன. இதனால் அனைத்துத் தரப்பினரிடையே வலுவான தகவல் தொடர்பு அவசியம் என அவர் குறிப்பிட்டார். கொரோனா படுக்கை வசதிகளை டெங்கு சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆராயும்படி தில்லி அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressRelease Page.aspx?PRID=1768439

------



(Release ID: 1768526) Visitor Counter : 213