எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் அனல்மின் நிலையங்களில் வேளாண் கழிவுகள் பயன்பாட்டு நிலை குறித்து மின்துறை செயலாளர் ஆய்வு செய்தார்

Posted On: 31 OCT 2021 9:05AM by PIB Chennai

அனல்மின் நிலையங்களில் வேளாண் கழிவுகள் எரிக்கப்படும்   நிலை குறித்து மத்திய மின்துறை செயலாளர் திரு அலோக் குமார் 2021 அக்டோபர் 28 அன்று ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் மத்திய மின்சார ஆணையம், தேசிய அனல்மின் கழகத் (என்டிபிசி) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், தேசிய வேளாண் கழிவுகள் இயக்கத்தின் இயக்குநர், மின்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

மின்துறை அமைச்சகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக என்டிபிசி மற்றும் பல்வேறு மாநிலங்களின் வேளாண் கழிவுகள் கொள்முதல் கீழ்க்காணுமாறு அதிகரித்துள்ளது.

1) என்டிபிசி ஆர்டர் செய்த 8,65,000 டன் வேளாண் கழிவுத் துகள்களின் விநியோகம் நடைமுறயில் உள்ளது. மேலும் அக்டோபரில் 65,000 டன்களுக்கு என்டிபிசி ஆர்டர் தந்துள்ளது. கூடுதலாக 25,00,000 டன் கொள்முதலுக்கான பணி நடைமுறயில் உள்ளது. இவற்றை விற்பனை செய்வதற்கான விண்ணப்பம் நவம்பர் 1ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகிறது.

2) ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகியவை தங்களின் அனல்மின் நிலையங்களில் எரிப்பதற்கு 13, 01, 000 டன் வேளாண் கழிவுத் துகள்களைக் கொள்முதல் செய்யவுள்ளன. இதற்கான ஆர்டர்கள் நவம்பரில் இறுதி செய்யப்படும்.

 

இந்த முயற்சிகளின் விளைவாக அக்டோபரில் 1400 டன் வேளாண் கழிவுத் துகள்கள் எரிக்கப்பட்டுள்ளன. அனல்மின் நிலையங்களில் இதுவரை மொத்தம் 53,000 டன் வேளாண் கழிவுத் துகள்கள் பசுமை எரிவாயுவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தில்லி உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் 2020ன் இதே காலத்தோடு ஒப்பிடுகையில் 2021ல் இதுவரை காற்று மாசு 58.3% குறைந்துள்ளது.

****(Release ID: 1768185) Visitor Counter : 118