எரிசக்தி அமைச்சகம்
தூய்மையான எரிசக்தி நுகர்வை ஊக்குவிக்க, எரிசக்தி பாதுகாப்பு சட்டம், 2001-ஐ திருத்த மின்சார அமைச்சகம் முன்மொழிகிறது
Posted On:
30 OCT 2021 9:57AM by PIB Chennai
வளர்ந்து வரும் எரிசக்தித் தேவைகள் மற்றும் மாறிவரும் உலகளாவிய காலநிலை சூழல்களுக்கு மத்தியில், எரிசக்தி பாதுகாப்பு சட்டம், 2001-ல் சில திருத்தங்களை முன்மொழிவதன் மூலம், தொழில், கட்டிடங்கள், போக்குவரத்து உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அதிகளவில் சென்றடைவதற்கான புதிய துறைகளை இந்திய அரசு கண்டறிந்துள்ளது.
பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு மின்சார அமைச்சகம் திருத்தங்களைத் தயாரித்துள்ளது. ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த மின்சார நுகர்வில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் குறைந்தபட்ச பங்கை வரையறுப்பது இந்த முன்மொழிவில் இடம்பெற்றுள்ளது.
கார்பன் சேமிப்பு சான்றிதழின் மூலம் சுத்தமான எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் ஏற்பாடு இதில் இருக்கும். சமீபத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை மதிப்பாய்வு செய்த மின்சார அமைச்சர் திரு ஆர் கே சிங், சம்பந்தப்பட்ட துறை அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் மாநில அரசுகளிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுமாறு அறிவுறுத்தினார்.
அதன்படி, சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்காக, 28 அக்டோபர், 2021 அன்று பங்குதாரர்கள், அமைச்சகங்கள் மற்றும் அமைப்புகளுடன் செயலாளர்ர் (மின்சாரம்) திரு அலோக் குமார் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
சட்டத்தை விரிவாக ஆய்வு செய்யவும், சாத்தியமுள்ள திருத்தங்கள் குறித்து விவாதிக்கவும், உள்ளீடுகளைப் பெறவும் நான்கு பங்குதாரர் ஆலோசனைக் கூட்டங்கள் (ஒரு தேசிய ஆலோசனை நிகழ்ச்சி மற்றும் மூன்று பிராந்திய ஆலோசனைகள்) நடத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1767783
********
(Release ID: 1767963)