மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

இந்திய தொழில்நுட்ப சூழலியல் வளர்ச்சியை செயற்கை நுண்ணறிவு வேகமாக செயல்படுத்தும்: மத்திய இணையமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர்

Posted On: 27 OCT 2021 4:16PM by PIB Chennai

மீள் வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் அசோசேம் அமைப்பு காணொலி வாயிலாக ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசிய மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் துறை மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர், “இந்திய தொழில்நுட்ப சூழலியல் வளர்ச்சியை செயற்கை நுண்ணறிவு வேகமாக செயல்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு.ராஜீவ் சந்திரசேகர், செயற்கை நுண்ணறிவு சிலருக்கு பெரும் தொழிலாக உள்ள நிலையில், இந்திய அரசைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவு – வழிமுறைகளைப் பயன்படுத்துவது என்றுதான் கருதுகிறது. அரசு ஆளுகையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், வேளாண் திட்டங்கள், ராணுவம், பாதுகாப்பு மற்றும் புலனாய்வு சார்ந்த திட்டங்கள், வருவாய் / வரிவசூல் மற்றும் சட்டம் – நிதி சார்ந்த பணிகளை விரைவுபடுத்த உதவும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஊரக அகன்றகற்றை இணைப்பு திட்டமான பாரத்நெட் திட்டத்தின் மூலம் இந்தியா, அதிக அளவில் இணைப்பு வசதிகளைக் கொண்ட நாடாக உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

****



(Release ID: 1766991) Visitor Counter : 207