குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

தேசிய அளவிலான விழிப்புணர்வு திட்டமான ‘சம்பவ்”-வை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு நாராயண் ரானே தொடங்கி வைத்தார்

Posted On: 27 OCT 2021 2:08PM by PIB Chennai

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தொழில்முனைதல்களை மேம்படுத்துவதில் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு நாராயண் ரானே என்று கூறினார்..

 

இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள சம்பவ் எனும் தேசிய அளவிலான விழிப்புணர்வு திட்டம்-2021-ஐ இன்று புதுதில்லியில் தொடங்கிவைத்த அவர், வளரும் தொழில்முனைவோர்களால் உருவாக்கப்பட்ட புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அவை தொடர்புடைய துறைகளில் தொடர் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் மக்களை சென்றடைவதற்கான ஒரு மாத கால முயற்சியாக இத்திட்டம் இருக்கும். நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ள கல்லூரிகள்/ஐடிஐக்களை சேர்ந்த மாணவர்கள், அமைச்சகத்தின் 130 கள அலுவலகங்களால் தொழில்முனைவோராக ஊக்குவிக்கப்படுவார்கள்.

 

பிரச்சாரத்தின் போது அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஒலி/ஒளி விளக்கக்காட்சிகள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

 

நாடு முழுவதும் உள்ள 1,300-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சுமார் 1,50,000 மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766869

 

***



(Release ID: 1766978) Visitor Counter : 227