வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளி நெட்வொர்க் குறித்து மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆய்வு
प्रविष्टि तिथि:
26 OCT 2021 2:16PM by PIB Chennai
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளி நெட்வொர்க் குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆய்வு செய்தார். திறந்தவெளி நெட்வொர்க் லாபநோக்கு இல்லாத நிறுவனம் இது தனியார் துறை பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையிலான அமலாக்கத்திற்கு, இந்நிறுவனம் தொடக்க மனநிலையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கால தொலைநோக்குடன் கூடிய நிர்வாகத்தால் செயல்படுத்தப்படும். இது வர்த்தகம் குறித்த ஆழமான புரிதலை ஏற்படுத்தும். நவீனத் தொழில்நுட்பத்தையும் மாற்றத்திற்கான தொலைநோக்கையும் வழங்கும். இந்த முறையின் முன்னேற்றம் குறித்து மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் திருப்தி தெரிவித்தார். டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளி நெட்வொர்க்கில் நம்பிக்கை ஏற்படுத்த சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விரிவான அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
-----
(रिलीज़ आईडी: 1766702)
आगंतुक पटल : 301