தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளின் காரணமாக தூர்தர்ஷனின் தேசிய பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிப்பு
Posted On:
25 OCT 2021 4:00PM by PIB Chennai
தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட அயோத்தி ராம்லீலா, ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் மற்றும் பிற நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இந்த சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான டிடி நேஷனல் பார்வையாளர்களின் எண்ணிக்கை 421 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.
பல்வேறு இடங்களில் இருந்து தசரா மகோத்ஸவம் மற்றும் ஆரத்தி போன்ற தினசரி நேரலை ஒளிபரப்புகள், ராம்லீலா, ராமாயண திரைப்படங்கள் மற்றும் ராம சரித்திரமனஸ் போன்ற சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன.
நவராத்திரியின் சிறப்பு நிகழ்ச்சிகளின் காரணமாக, முந்தைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் தூர்தர்ஷனின் பார்வையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருந்தது. சில நாட்கள் இது 139 சதவீதம் வரை அதிகரித்தது.
நவராத்திரி கொண்டாட்டங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 67 மணிநேர சிறப்பு நிகழ்ச்சிகள் டிடி நேஷனலில் தினமும் சராசரியாக 6.7 மணி நேரத்துக்கு 10 புனித நாட்களின் போது ஒளிபரப்பப்பட்டன.
விஜயவாடாவில் கனக துர்கா தேவியின் குங்கும பூஜை மற்றும் அலங்காரம், திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி நவராத்திரி பிரம்மோத்ஸவம், தில்லியில் உள்ள ஜாண்டேவாலனின் ஆரத்தி, சத்தர்பூர் மந்திர் மற்றும் கொல்கத்தாவில் உள்ள மஹாலயா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் ஒளிபரப்பியது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766297
(Release ID: 1766378)
Visitor Counter : 247