எரிசக்தி அமைச்சகம்

மின்துறையின் புதிய விதிமுறைகள் அறிவிப்புகளால் பசுமை எரிசக்திகான இந்தியாவின் உறுதி மேலும் வலுவடைகிறது

Posted On: 23 OCT 2021 10:31AM by PIB Chennai

பருவநிலை மாற்றத்தை நோக்கிய இந்தியாவின் உறுதியை நிறைவேற்றுவதற்காக, மின்துறையின் நிலைத்தன்மை மற்றும் சுத்தமான எரிசக்தி மேம்பாட்டுக்கான விதிமுறைகளை மின் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மின்துறைச் சட்டம் 2003-ன்கீழ் மின்துறை அமைச்சகம் கீழ்கண்ட விதிமுறைகளை அறிவித்துள்ளது. மின்சார நுகர்வோர்கள் மற்றும் இதர பங்குதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன

மின்சார (சட்டம் மாற்றம் காரணமாக செலவினங்களை சரியான நேரத்தில் மீட்பது) விதிமுறைகள் 2021

மின்சார (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து மின் உற்பத்தியை அதிகரிப்பது) விதிமுறைகள் 2021

சட்டம் மாற்றம் காரணமாக  செலவினங்களை சரியான நேரத்தில் மீட்பது மிக முக்கியமானது. மின்துறையில் முதலீடு, பெரும்பாலும் சரியான நேரத்தில் செலவினங்களை மீட்பதில் சார்ந்துள்ளது.  தற்போது சட்டங்கள் நிறைவேற காலதாமதம் ஆகிறது. இது இத்துறையின் நம்பகத்தன்மையைப் பாதிக்கிறது மற்றும் முதலீட்டாளர்களும் நிதி நெருக்கடியைச் சந்திக்கின்றனர். புதிய விதிமுறைகள்  நாட்டில் முதலீட்டுக்கான உகந்த சூழலுக்கு உதவும். உலகம் முழுவதும் எரிசக்தித்துறையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எரிசக்தி மாற்றத்தைக் கொண்டுவர இந்தியாவும் உறுதி அளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட், 2030ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை அமைப்பதற்கான உறுதியை இந்தியா அறிவித்துள்ளது. இந்த இலக்குகளை அடைய இந்த விதிமுறைகள் உதவும். நுகர்வோருக்கு பசுமை எரிசக்திக் கிடைப்பதையும் இது உறுதி செய்யும் மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1765903

-----



(Release ID: 1765964) Visitor Counter : 251