புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

சூரியசக்தி முதலீடுகளை 2030-க்குள் உலகளவில் 1 டிரில்லியன் டாலர்களை எட்டச் செய்வதற்கான உறுதியுடன் சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் நான்காவது கூட்டம் நிறைவடைந்தது

Posted On: 22 OCT 2021 11:52AM by PIB Chennai

2021 அக்டோபர் 18 முதல் 21 வரை காணொலி வாயிலாக நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் நான்காவது பொதுக்குழுக் கூட்டத்திற்கு மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரும் சூரிய சக்தி கூட்டணியின் சபைத் தலைவருமான திரு ஆர் கே சிங் தலைமை வகித்தார்.

74 உறுப்பு நாடுகள் மற்றும் 34 பார்வையாளர் மற்றும் வருங்காலத்தில் இணையக்கூடிய நாடுகள் என மொத்தம் 108 நாடுகள், 23 பங்குதாரர் அமைப்புகள் மற்றும் 33 சிறப்பு அழைப்பாளர் அமைப்புகள் இக்கூட்டத்தில் பங்கேற்றன. ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்திற்கான துணைத் தலைவர் ஃபிரான்ஸ் டிம்மர்மன்ஸ் அக்டோபர் 20 அன்று உரையாற்றினார்.

தலைமை உரையை வழங்கிய திரு சிங், சூரியசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகளவில் பயன்படுத்துவதற்கான நேரம் இது. நாங்கள் இதை இந்தியாவில் வெற்றிகரமாக செய்துள்ளோம், அதை உலகளாவிய ரீதியில் பிரதிபலிக்க முடியும் என்றார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'ஒரே சூரியன், ஒரே உலகம் ஒரே தொகுப்பு' முன்முயற்சி மற்றும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் சூரியசக்தி முதலீடுகள் குறித்து இந்த வருடாந்திர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் அடுத்த ஐந்து வருடங்களுக்கான செயல் திட்டம் குறித்தும் உறுப்பு நாடுகளின் சர்வதேசத் தலைவர்கள் விவாதித்தனர்.

சூரியசக்தி முதலீடுகளை 2030-க்குள் உலகளவில் 1 டிரில்லியன் டாலர்களை எட்ட செய்வதற்கான உறுதியுடன் சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் நான்காவது கூட்டம் நிறைவடைந்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1765671

•••••

(Release ID: 1765671)



(Release ID: 1765730) Visitor Counter : 340