பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இந்திய அரசில் நிலுவையில் உள்ளப் பணிகளை முடிப்பதற்கானச் சிறப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்
Posted On:
20 OCT 2021 6:15PM by PIB Chennai
இந்திய அரசில் நிலுவையில் உள்ளப் பணிகளை முடிப்பதற்காக அக்டோபர் 2 அன்று தொடங்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை தமதுக் கட்டுப்பாட்டில் உள்ள 9 துறைகள்/ அமைச்சகங்களில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று ஆய்வு செய்தார்.
புவி அறிவியல் அமைச்சகம், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை, உயிரி தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, விண்வெளித்துறை மற்றும் அணுசக்தி துறையின் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்ட 20 நாட்களுக்குள்ளாகவே இந்திய அரசின் அமைச்சகங்கள்/துறைகளால் பயன்படுத்தப்பட்ட தவிர்க்கக்கூடிய இடமான ஒரு லட்சம் சதுர அடிக்கும் அதிகமான இடம் உருவாக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங்கிற்கு தெரிவிக்கப்பட்டது. நான்கு லட்சத்திற்கும் அதிகமான கோப்புகள் மீதான பணிகள் குறுகிய காலத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் திருப்தி தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் அரசில் நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிரச்சாரத்தின் முடிவில் அதன் முன்னேற்றம் குறித்து அவருக்கு தெரிவிக்கப்படும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1765216
*****************
(Release ID: 1765262)