பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்திய கண்காணிப்பு ஆணையம் மற்றும் சிபிஐ கூட்டு மாநாட்டில் பிரதமர் காணொலி மூலம் உரை


‘‘கடந்த 6-7 ஆண்டுகளில், ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான நம்பிக்கையை ஏற்படுத்துவதில் மத்திய அரசு வெற்றியடைந்துள்ளது’’

‘‘ஊழலை எதிர்ப்பதற்கான அரசியல் உறுதி இன்று உள்ளது மற்றும் நிர்வாக அளவில் தொடர்ச்சியான முன்னேற்றம் மேற்கொள்ளப்படுகின்றன’’

‘‘புதிய இந்தியா கண்டுபிடிக்கிறது, முயற்சிக்கிறது, அமல்படுத்துகிறது. அரசு நடைமுறையில் ஊழலை ஏற்றுக்கொள்ள புதிய இந்தியா தயாராக இல்லை. அரசு நடைமுறைகள் வெளிப்படையாகவும், திறம்பட இருக்கவும், மற்றும் சுமூகமான நிர்வாகத்தையும் அரசு விரும்புகிறது’’

‘‘அரசு நடைமுறைகளை எளிதாக்கி, சாதாரண மக்களின் வாழ்வில் அரசு தலையீட்டைக் குறைக்கும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது’’

‘‘ நம்பிக்கையான அணுகுமுறை மற்றும் தொழில்நுட்பம் திறமையான நிர்வாகத்தை வலுப்படுத்தியுள்ளது மற்றும் தொழில் செய்வதை எளிதாக்கியுள்ளது’’

‘‘ ஊழலைத் தடுக்க, தொழில்நுட்பத்துடன் - அரசு நடைமுறையில் எளிமை, தெளிவு, வெளிப்படைத்தன்மை வெற்றிகரமானதாக இருக்கும்’’

‘‘நாட்டையும், நாட்டு மக்களையும் ஏமாற்றும் யாரும் எங்கும் பாதுகாப்பாக இருக்க கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்’’

‘‘புதிய இந்தியாவு

Posted On: 20 OCT 2021 10:05AM by PIB Chennai

மத்திய கண்காணிப்பு ஆணையம் மற்றும் சிபிஐ கூட்டு மாநாட்டில்  பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்இந்தக் கூட்டம் குஜராத் கெவாடியாவில் நடைபெறுகிறது.

இந்தியாவின் முன்னேற்றம், மக்கள் கவலை  மற்றும் மக்கள் நலன்  அடிப்படையில், நிர்வாகத்தை அமைக்க அதிகளவிலான முன்னுரிமை அளித்த சர்தார் படேல் சிலை இருக்கும் கெவாடியாவில் இந்த மாநாட்டின்  விவாதம் நடப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.  ‘‘இன்று விடுதலையின் வைர விழா காலத்தில், மிகப் பிரம்மாண்ட இலக்குகளை அடைவதை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கும்போது, மக்களுக்கு ஆதரவான மற்றும் செயல்திறன் மிக்க நிர்வாகம், உங்கள் நடவடிக்கை சார்ந்த விடா முயற்சி ஆகியவை சர்தார் சாகிப்பின் லட்சியங்களுக்கு பலம் அளிக்கும்’’ என பிரதமர் கூறினார்.

நாட்டில் அனைத்து இடங்களிலும் ஊழலை ஒழிக்க சிபிஐ மற்றும் மத்திய கண்காணிப்பு அதிகாரிகள் தங்களை மீண்டும் அர்ப்பணிக்க வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார். மக்களின் உரிமையை ஊழல் பறிக்கிறது, அனைவரும் நீதியை நாடுவதற்கும்,  நாட்டின் முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்கிறது மற்றும் நாட்டின் ஒட்டு மொத்த சக்திக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.  

ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான நம்பிக்கையை ஏற்படுத்துவதில் கடந்த 6-7 ஆண்டுகளில் அரசு வெற்றியடைந்துள்ளது என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்இடைத்தரகர்கள் மற்றும் லஞ்சம் இல்லாமல்  அரசு திட்டப் பயன்களை  மக்கள் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என பிரதமர் கூறினார்.  ஊழல் செய்பவர்கள் எவ்வளவு பெரிய ஆளுாக இருந்தாலும், எங்கு சென்றாலும் தப்ப முடியாது என மக்கள் தற்போது உணர்கின்றனர். ‘‘ முன்பு, அரசுகள் மற்றும் அரசு நடைமுறைகள் செயல்பட்ட விதத்தில் அரசியல் மற்றும் நிர்வாக உறுதிதன்மை  குறைவாக இருந்தது. இன்று ஊழலைத் தாக்கும் அரசியல் உறுதி உள்ளது மற்றும் நிர்வாக அளவில் தொடர்ச்சியான முன்னேற்றம் மேற்கொள்ளப்படுகிறது. மாறியுள்ள இந்தியா பற்றி பேசுகையில், ‘‘இன்று, 21-ம் நூற்றாண்டு இந்தியா, நவீன சிந்தனையுடன், மனித குல பயன்பாட்டுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது. புதிய இந்தியா கண்டுபிடிக்கிறது, முயற்சிக்கிறது, அமல்படுத்துகிறது. அரசு நடைமுறையில் ஊழலை ஏற்றுக்கொள்ள புதிய இந்தியா எப்போதும் தயாராக இல்லை. அரசு நடைமுறை, வெளிப்படைத்தன்மையுடனும், திறம்பட இருக்கவும், மற்றும் சமூகமான நிர்வாகத்தையும் புதிய இந்தியா விரும்புகிறது’’

அதிகளவிலான கட்டுப்பாடு மற்றும் அதிகளவிலான பாதிப்பு என்ற அரசின் பயணத்திலிருந்து குறைந்தபட்ச அரசு மற்றும் அதிக ஆளுகை நோக்கி செல்வது பற்றி கூறிய பிரதமர், அரசு நடைமுறைகளை எளிதாக்குவதன் மூலம், சாதாரண மக்களின் வாழ்வில் அரசு தலையீட்டைக் குறைக்கும் பணியை தனது அரசு எவ்வாறு மேற்கொண்டது என்பது பற்றி விளக்கினார்மக்களுக்கு அதிகாரம் அளிக்க, நம்பிக்கை மற்றும் தொழில்நுட்பத்தை அரசு எவ்வாறு வலியுறுத்துகிறது என்பது பற்றி பிரதமர் விளக்கினார். இந்த அரசு மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதனால்தான், ஆவணங்களை சரிபார்க்கும் பல நடைமுறைகள் அகற்றப்பட்டுள்ளன. பிறப்பு சான்றிதழ், ஓய்வூதியத்துக்கான ஆயுள் சான்றிதழ் போன்றவை இடைத்தரகர்கள் இல்லாமல் தொழில்நுட்பம் மூலம் வழங்கப்படுகின்றன.  குரூப் சி மற்றும் குரூப் டி பணியிடங்களுக்கான நேர்காணல் முறைகள் நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு முன்பதிவு முதல் வரிதாக்கல் வரை முகமில்லா நடைமுறை மற்றும் ஆன்லைன் நடைமுறைகள் ஊழல் சம்பவங்களை குறைக்கின்றன.  

இந்த நம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறை திறமையான நிர்வாகத்தை வலுப்படுத்தி, தொழில் செய்வதை எளிதாக்கியுள்ளது. அனுமதிகள் மற்றும் இணக்கங்கள் போன்ற பழைய வழக்கொழிந்த விதிமுறைகள் அகற்றப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார். அதேநேரத்தில், தற்போதைய சவால்களுக்கு ஏற்ற வகையில் பல கடுமையானச் சட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. இன்னும் பல இணக்கத் தேவைகளை திட்டமிடப்பட்டுள்ளன எனவும், பெரும்பாலான அனுமதிகள் மற்றும் இணங்கங்கள் முகமில்லா நடைமுறைகளாகவும், சுய மதிப்பீடு மற்றும் சுய-அறிவிப்பு முறையாக மாற்றுவது ஊக்குவிக்கப்படுகிறது.  அரசின் மின்னணுச் சந்தை மின்னணு-ஒப்பந்த முறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்துள்ளது. டிஜிட்டல் அடையாள நடைமுறைகள், விசாரணையை எளிதாக்கியுள்ளன. அதேபோல், பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம், முடிவு எடுப்பது தொடர்பான பல சிரமங்களை அகற்றும். இந்த நம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப பயணத்தில், ஊழல் தடுப்பு அமைப்புகள் மற்றும் மத்திய கண்காணிப்பு , சிபிஐ அதிகாரிகளின் மீது நாட்டின் நம்பிக்கை முக்கியமானது என அவர் வலியுறுத்தினார். ‘‘ நாடு முதலில் என்ற லட்சியத்தை நாம் எப்போது முன்னணியில் வைத்திருக்க வேண்டும் மற்றும் பொது மக்கள் நலன் குறித்த  நமது பணியை உறைகல் மூலம் நாம் எப்போதும் தீர்மானிக்க வேண்டும்’’ என அவர் கூறினார்.  இவற்றை நிறைவேற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு தான் எப்போதும் ஆதரவு அளிப்பதாக பிரதமர்  மேலும் கூறினார்.

ஊழல் தடுப்பு குறித்த தனது கருத்துக்களை பிரதமர் பகிர்ந்து கொண்டார்எச்சரிக்கையுடன் ஊழல் தடுப்பை ஏற்படுத்த முடியும் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் அனுபவம் மூலம் உழல் தடுப்பு முறையை வலுப்படுத்த முடியும் என அவர் கூறினார்.  ஊழல்தடுப்புக்கு தொழில்நுட்பத்துடன் எச்சரிக்கை, எளிமை, தெளிவு, வெளிப்படைத்தன்மை ஆகியவை வெற்றிகரமானதாக இருக்கும். இது நமது பணியை எளிதாக்கும் மற்றும் நாட்டின் வளங்களை பாதுகாக்கும் என அவர் கூறினார்.

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அச்சப்பட வேண்டாம் எனவும், நாட்டை மற்றும் நாட்டு மக்களை ஏமாற்றும் யாரும் எங்கும் பாதுகாப்பாக இருக்க கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.  அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்அரசு நடைமுறை பற்றி பயப்படுவதை ஏழை மக்கள் மனிதில் இருந்து அகற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.  தொழில்நுட்பச் சவால்கள் மற்றும் இணைய வழிக் குற்றங்கள் பற்றி விவாதிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை எளிதாக்குவது பற்றி சுதந்திர தினத்தில் அவர் அழைப்பு விடுத்ததை நினைவு கூர்ந்த பிரதமர், புதிய இந்தியாவுக்குத் தடையாக இருக்கும் நடைமுறைகளை மத்திய கண்காணிப்பு ஆணையம், சிபிஐ மற்றும் இதர ஊழல் தடுப்பு அமைப்புகள் அகற்ற வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார். ‘‘ஊழலைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்ற புதிய இந்தியாவின் கொள்கையை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். அரசு நடைமுறை நோக்கி மக்கள் நெருங்கி வரும் சட்டங்களை நீங்கள் அமல்படுத்த வேண்டும் மற்றும் அரசு நடைமுறையில் இருந்து ஊழல் வெளியேற வேண்டும்’’ என கூறி பிரதமர் தனது உரையை முடிவு செய்தார்.   

***




(Release ID: 1765140) Visitor Counter : 329