மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பற்றிய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டார்

Posted On: 19 OCT 2021 4:49PM by PIB Chennai

இந்திய தொழில் கூட்டமைப்பான - சிஐஐ ஏற்பாடு செய்த "எதிர்கால தொழில்நுட்பம் 2021" என்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பற்றிய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியின் தொடக்க அமர்வில் மின்னணு & தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் காணொலி மூலம் கலந்து கொண்டார்.

2021 அக்டோபர் 19 முதல் 27 வரை இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. உத்தி, வளர்ச்சி, உறுதி, உள்ளடக்கம், நம்பிக்கை எனும் ஐந்து கருப்பொருள்களை இது மையமாகக் கொண்டதாகும். 

தொடக்க விழாவில் உரையாற்றிய திரு ராஜீவ் சந்திரசேகர், டிஜிட்டல் பொருளாதாரத்தில் கொவிட்டின் தாக்கம் குறித்து பேசினார். “நமது பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதில் கடந்த 6 ஆண்டுகளில் மிகப்பெரிய முன்னேற்றங்களை நாம் அடைந்துள்ளோம். கொவிட் பெருந்தொற்றின் போது இந்தியா உறுதியாக இருப்பதை நிரூபிக்க இது உதவியது," என்றார்.

மேலும் பேசிய அவர், யூனிகார்ன்களை அதிகளவில் நாம் உருவாக்கியுள்ளோம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் 65 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்தோம் என்று கூறினார். 

எதிர்காலத்திற்கான செயல்திட்டம் குறித்து பேசிய திரு ராஜீவ் சந்திரசேகர், கொரோனாவுக்குப் பிந்தையக் காலகட்டத்தில் புதிய வாய்ப்புகள் நிறைய உள்ளதாக கூறினார். "தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்கு இதைவிட மிகச் சிறந்தக் காலம் வேறு எதுவும் இல்லை. நமது எதிர்காலத்தை மறு கற்பனை செய்து கட்டமைப்பதற்கான காலமிது. கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டம் இந்திய நிறுவனங்களுக்கு வித்தியாசமான வாய்ப்புகளை வழங்குகிறது," என்றார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764917

*******



(Release ID: 1764946) Visitor Counter : 218