கலாசாரத்துறை அமைச்சகம்
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறப்பு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்படும் அபிதம்மா தின நிகழ்ச்சியில் பிரதமர் நாளை கலந்து கொள்கிறார்
Posted On:
19 OCT 2021 2:46PM by PIB Chennai
மத்திய கலாச்சார அமைச்சகம், சர்வதேச பவுத்தக் கூட்டமைப்பு ஆகியவை உத்தரப் பிரதேச அரசுடன் இணைந்து, 2021 அக்டோபர் 20 அன்று உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் அஷ்வின் பூர்ணிமா நன்னாளில் அபிதம்மா தினத்தை ஏற்பாடு செய்கிறது.
இலங்கை, தாய்லாந்து, மியான்மர், தென் கொரியா, நேபாளம், பூட்டான், கம்போடியா மற்றும் பல்வேறு நாடுகளின் முக்கிய துறவிகள் மற்றும் தூதர்கள் முன்னிலையில் பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.
உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல்; அம்மாநில முதல்வர் திரு யோகி ஆதித்யநாத்; மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு; கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி; விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம் சிந்தியா மற்றும் கலாச்சார, விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகங்களின் இணை அமைச்சர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
வாஸ்கடுவா ஆலயத்தின் தற்போதையத் தலைவர் தலைமையிலான 12 பேர் கொண்ட ஆன்மிகக் குழு உட்பட 123 பேர் இலங்கையில் இருந்து இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். புத்த மதத்தின் அனைத்துப் பிரிவுகளின் துணைத் தலைவர்கள் மற்றும் கேபினட் அமைச்சர் திரு நமல் ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசின் 5 அமைச்சர்களும் இதில் அடங்குவர்.
இலங்கையின் வாஸ்கடுவா ஸ்ரீ சுப்புத்தி ராஜ்விஹாரா கோவிலில் இருந்து, கோவிலின் தலைவரால் கொண்டுவரப்படும் புனித புத்தர் நினைவுச்சின்னம் இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக இருக்கும்.
இந்நாளில் பிரதமரால் திறக்கப்படவுள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையம், உலகெங்கிலும் உள்ள பவுத்தர்களின் புனித இடங்களை இணைப்பதில் ஒரு முக்கிய அடையாளமாக திகழும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764902
(Release ID: 1764932)
Visitor Counter : 303