சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அண்மைத் தகவல்
Posted On:
16 OCT 2021 10:00AM by PIB Chennai
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 97.23 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 15,981 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.08 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.
கடந்த 24 மணி நேரத்தில் 17,861 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,33,99,961 என அதிகரித்துள்ளது.
கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் தற்போது 0.59 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,01,632; கடந்த 218 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை.
வாராந்திர பாதிப்பு விகிதம் (1.44 சதவீதம்) கடந்த 113 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் (1.73 சதவீதம்) கடந்த 47 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இதுவரை மொத்தம் 58.98 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
(Release ID: 1764317)
Visitor Counter : 169