எரிசக்தி அமைச்சகம்
1000 மெகாவாட் திறனுள்ள மிகப் பெரிய மின்கல கருவிகளை கொள்முதல் செய்ய தயாராகிறது இந்தியா
प्रविष्टि तिथि:
14 OCT 2021 2:58PM by PIB Chennai
சோதனை முயற்சியாக 1000 மெகாவாட் திறனுள்ள மின்கலன் கருவிகளை கொள்முதல் செய்வதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் மின்துறை அமைச்சகத்தின் கூட்டு முயற்சி.
2030ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை 450 ஜிகாவாட் அளவுக்கு அடைய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு மிகப் பெரிய மின்கலன் அமைப்புகள் தேவை.
1000 மொகாவாட் திறனுள்ள மின்கலன்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களை கோர புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின், இந்திய சூரிய மின்சக்தி கார்பரேஷன் முடிவு செய்துள்ளது. ஏலத்துக்கு முந்தைய கூட்டம், அக்டோபர் 28ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. பல தரப்பினரின் ஆலோசனைகளை பெற்றபின், ஒப்பந்தத்துக்கான அறிவிப்பு நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763883
******
(रिलीज़ आईडी: 1763990)
आगंतुक पटल : 351