சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 96.82 கோடியை கடந்துள்ளது

Posted On: 14 OCT 2021 9:52AM by PIB Chennai

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 35,66,347 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 96.82  கோடியை (96,82,20,997) கடந்தது. 94,82,108 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,808 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,33,62,709 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.07 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 109 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 15,823 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,06,586; 215 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை. நாட்டில் மொத்தம் கொவிட் சிகச்சை பெறுபவர்களின் விகிதம் தற்போது 0.61 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 13,01,083 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 58.76 கோடி கொவிட் பரிசோதனைகள் (58,76,64,525) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி கடந்த 111 நாட்களாக 3 சதவீதத்திற்கும் கீழே நீடித்து, தற்போது 1.44 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி தற்போது விகிதம் 1.46 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 128 நாட்களாக 5 சதவீதத்திற்கு கீழேயும் 45 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763784

****



(Release ID: 1763919) Visitor Counter : 164