சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அண்மைத் தகவல்
Posted On:
12 OCT 2021 9:24AM by PIB Chennai
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 95.89 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 14,313 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது; 224 நாட்களில் இதுவே மிகவும் குறைந்த அளவாகும்.
கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ். தற்போது 0.63 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,14,900; கடந்த 212 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.04 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.
கடந்த 24 மணி நேரத்தில் 26,579 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,33,20,057 என அதிகரித்துள்ளது.
வாராந்திர பாதிப்பு விகிதம் (1.48 சதவீதம்) கடந்த 109 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் (1.21 சதவீதம்) கடந்த 43 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இதுவரை மொத்தம் 58.50 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763085
(Release ID: 1763173)
Visitor Counter : 248