சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 அண்மைத் தகவல்

Posted On: 09 OCT 2021 9:08AM by PIB Chennai

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 93.99 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 19,740 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ். தற்போது 0.70 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் மாதம் முதல், இது  மிகக் குறைந்த அளவு.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,36,643; கடந்த 205 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 97.98 சதவீதம்; கடந்த 2020 மார்ச் முதல் இது அதிகமான அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 23,070 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,32,48,291

வாராந்திர பாதிப்பு விகிதம் (1.62 சதவீதம்) கடந்த 106 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் (1.56 சதவீதம்) கடந்த 40 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை மொத்தம் 58.13 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762323



(Release ID: 1762356) Visitor Counter : 188