சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மன நலம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக பச்சை நிற ரிப்பன்களை டாக்டர் மன்சுக் மாண்டவியா விநியோகித்தார்

Posted On: 08 OCT 2021 3:01PM by PIB Chennai

"மன நலம் என்பது முழுமையான ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். அது குறித்த தவறான எண்ணங்களை விழிப்புணர்வின் மூலம் போக்க முடியும்." என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று கூறினார். பசுமை ரிப்பன் முன்முயற்சியை இன்று தொடங்கி வைத்த அவர் இவ்வாறு கூறினார். 

இந்நிகழ்ச்சியில், மனநலம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு பச்சை நிற ரிப்பன்களை டாக்டர் மன்சுக் மாண்டவியா வழங்கினார்.

இந்த பச்சை ரிப்பன் மன ஆரோக்கியத்தின் அடையாளமாகும். நம் சமூகத்தில் மன நலம் குறித்த விழிப்புணர்வை மேலும் மேலும் பரப்ப வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அனைத்து வகையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, முன்னேற்றத்திற்கு அவசியம் என்று டாக்டர் மாண்டவியா வலியுறுத்தினார். மனநலப் பிரச்சினையை அங்கீகரிப்பது, கண்டறிவது மற்றும் சிகிச்சையளிப்பது முக்கியம் என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762099  

*****************



(Release ID: 1762206) Visitor Counter : 179