ஆயுஷ்
பாரம்பரிய மருத்துவ முறைகளில் கல்வி ஆராய்ச்சி மற்றும் திறன் வளர்த்தலில் இந்தியா, குரோஷியா இணைந்து செயல்படவுள்ளன
प्रविष्टि तिथि:
08 OCT 2021 11:57AM by PIB Chennai
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில், குறிப்பாக ஆயுர்வேத துறையில், இந்தியா மற்றும் குரோஷியா இடையே கல்வி ஒத்துழைப்புக்கான பாதையை வகுக்கும் விதமாக அந்நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றில் ஆயுஷ் அமைச்சகம் புதன்கிழமை கையெழுத்திட்டது.
கல்வி ஆராய்ச்சி, மருத்துவம் மற்றும் கல்வி நடவடிக்கைகள், மருத்துவ கல்வி, பயிற்சி மற்றும் திறன் வளர்த்தல் ஆகியவற்றில் இதர நாடுகளுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக குரோஷியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து ஆயுர்வேதத் துறையில் கல்வி நடவடிக்கைகளை இரு தரப்பினரும் மேற்கொள்வார்கள். நிறுவனங்கள், இறுதி பயனர்கள் மற்றும் பங்குதாரர்களின் தேவைக்கேற்ப கல்வித் தரங்களையும் படிப்புகளையும் இரு தரப்பும் உருவாக்குவதோடு, குரோஷியாவில் ஆயுர்வேத கல்விக்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவார்கள்.
"கல்வி ஆராய்ச்சி, மருத்துவம் மற்றும் கல்வி நடவடிக்கைகள், மருத்துவ கல்வி, பயிற்சி மற்றும் திறன் வளர்த்தலை இது ஊக்குவிக்கும்" என்று ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்வேத ஆலோசகர் டாக்டர் மனோஜ் நேசரி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762025
*****************
(रिलीज़ आईडी: 1762204)
आगंतुक पटल : 302