வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
கட்டணமில்லாத தடைகளை ஆசியான் கூட்டமைப்பு நீக்க வேண்டும்: திரு பியூஷ் கோயல் அழைப்பு
Posted On:
08 OCT 2021 2:15PM by PIB Chennai
கட்டணம் இல்லாத தடைகளை ஆசியான் கூட்டமைப்பு நீக்க வேண்டும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தோ-ஆசியான் வர்த்தகம் - ஆசியான் வர்த்தக அமைச்சர்களின் சிறப்பு கூட்டத்தை, இந்திய தொழில் கூட்டமைப்பு(சிஐஐ) நடத்தியது. இதில் திரு பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசியதாவது:
ஆசியான் பிராந்தியத்துக்கு வெளியே, 3ம் தரப்பு நாடுகள் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அடிக்கடி மீறுகின்றன. இதை ஆசியான் கூட்டமைப்பு தடுக்க வேண்டும்.
ஆசியான் பிராந்தியத்திலும், வேளாண் மற்றும் ஆட்டோ வாகனத்துறையில் எங்கள் ஏற்றுமதிகளுக்கு பல கட்டுப்பாட்டு தடைகளை நாங்கள் சமீபத்தில் சந்தித்தது துரதிருஷ்டம். இது இந்தியா உட்பட இதர நாடுகளில் பதில் நடவடிக்கையில் தான் முடிவடையும், வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நமது தலைவர்களின் நீண்ட கால ஆசை பாதிக்கும்.
ஆசியான் நாடுகளுக்கு சாதகமாக , வர்த்தக சமநிலையற்ற தன்மையை சரிசெய்ய, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, பரஸ்பர தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் தள்ளுபடிகளை ஆசியான் கூட்டமைப்பு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு திரு பியூஷ் கோயல் பேசினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762079
*****************
(Release ID: 1762149)
Visitor Counter : 202