வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

அனைத்து அரசு திட்டங்களிலும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துமாறு திரு பியூஷ் கோயல் வலியுறுத்தல்

Posted On: 07 OCT 2021 6:15PM by PIB Chennai

அனைத்து அரசு திட்டங்களிலும் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள் & உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளி அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.

பல்வேறு தொழில்கள், ஜவுளி மற்றும் ஆட்டோமொபைல் பூங்காக்களுக்கு அதிக நிதியை அரசு வழங்குவதால், அத்தகைய ஒவ்வொரு பூங்காவும் அதற்குரிய திறன் மேம்பாட்டு அமைப்பை உள்ளடக்கியிருக்க வேண்டும், என்றார் அவர்.

"அனைவரின் முயற்சி: அனைவரின் கூட்டு" என்ற இணைய கருத்தரங்கில் இன்று உரையாற்றிய திரு கோயல், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை, திறன் மேம்பாட்டின் மீது கவனம் செலுத்துகிறது என்று கூறினார். கல்வியை தவிர, இரட்டை பட்டப்படிப்பு திட்டங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடனான கூட்டு, மாணவர் பரிமாற்ற திட்டம் மற்றும் சுதந்திர கலைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது.

புதிய கல்விக் கொள்கைக்காக ஜனவரி 2015 முதல் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் சுமார் 700 மாவட்டங்களில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆலோசனைகள் இவற்றில் அடங்கும் என்றும் அவர் கூறினார். புதிய கல்விக் கொள்கையை யாரும் விமர்சிக்கவில்லை, அனைவரின் முயற்சியின் விளைவாக உருவாக்கப்பட்டது, என்று அவர் கூறினார்.

மற்ற நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையின் போது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தி உயர் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும் அரசு பணியாற்றி வருவதாக திரு கோயல் கூறினார்.

"சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் ஆகியவற்றின் போது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அல்லது கனடா போன்ற பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒத்துழைப்பின் முக்கிய துறையாக கல்வியை சேர்க்க நாங்கள் முயற்சி செய்கிறோம். புதிய கல்விக் கொள்கையை  அடிப்படையாகக் கொண்டு கட்டணத்தை குறைப்பதை பல்கலைக்கழகங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன, ”என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761773



(Release ID: 1761914) Visitor Counter : 151