சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 91 கோடியை கடந்து குறிப்பிடத்தக்க சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2021 10:04AM by PIB Chennai

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்  72,51,419  தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 91 கோடியைக்  (91,54,65,826) கடந்துள்ளது88,75,020 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 29,639  பேர் குணமடைந்துள்ளதால்இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,31,50,886- ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 97.93 சதவீதமாக உள்ளது.  கடந்த 2020 மார்ச் முதல் இதுவே அதிகமான அளவு.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 100 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18,346 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,52,902; கடந்த 201 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை. நாட்டில் மொத்தம் கொவிட் சிகச்சை பெறுபவர்களின் விகிதம் தற்போது 0.75 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11,41,642 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 57.53 கோடி கொவிட் பரிசோதனைகள் (57,53,94,042) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு தொடர்ந்து 102 நாட்களாக 3 சதவீதத்திற்கும் கீழே, 1.66 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 1.61 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 36 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 119 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760989

*******


(வெளியீட்டு அடையாள எண்: 1761012) வருகையாளர் எண்ணிக்கை : 322
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Malayalam