ஜல்சக்தி அமைச்சகம்
ஆரிட் பகுதிகளில் நிலத்தடி நீர் நிர்வாகத்திற்காக உயர்தர ஆய்வை திரு.கஜேந்திர சிங் ஷெகாவத்தும், டாக்டர் ஜிதேந்திர சிங்கும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்
Posted On:
04 OCT 2021 3:20PM by PIB Chennai
ஆரிட் பகுதிகளில் நிலத்தடி நீர் நிர்வாகத்திற்காக உயர்தர ஆய்வை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் புவிசார் அறிவியல் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர், பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன், பொதுமக்கள் குறைத் தீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அக்டோபர் 5 (செவ்வாய்) அன்று இதனை அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள். ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 3.88 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உயர்தர புவிசார் ஆய்வையும் இதர அறிவியல் ஆய்வுகளையும் மேற்கொள்ள ஜல்சக்தி அமைச்சகத்தின் மத்திய நிலத்தடி நீர் வாரியமும் ஐதராபாத்தில் உள்ள சிஎஸ்ஐஆர், தேசிய புவிசார் ஆராய்ச்சிக் கழகமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்த்தத்தை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக அக்டோபர் 5 அன்று ராஜஸ்தானில் அமைச்சர்கள் ஆய்வைத் தொடங்கி வைக்கின்றனர்.
*****
(Release ID: 1760843)
Visitor Counter : 211