கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

போக்குவரத்து மூலம் மாற்றம்: பிரதமரின் தொலைநோக்குக்கு பங்களித்தமைக்காக, இந்திய கப்பல் கழகம் மத்திய அமைச்சர் பாராட்டு

Posted On: 04 OCT 2021 12:16PM by PIB Chennai

போக்குவரத்து மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குக்கு பங்களித்தமைக்காக இந்திய கப்பல் கழகம் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்  திரு சர்பானந்த சோனோவால் பாராட்டு தெரிவித்தார்.

மும்பையில் நடந்த இந்திய கப்பல் கழகம் வைரவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், இத்துறை இணையமைச்சர் திரு சாந்தனு தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர்இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் பேசியதாவது:   

மிகப் பெரிய கடல் போக்குவரத்து நிறுவனமான இந்திய கப்பல் கழகம், போக்குவரத்து மூலம் மாற்றம் என்ற பிரதமரின் தொலை நோக்குக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக வெற்றியின் அடையாளமாக, இந்திய கப்பல் கழகம் திகழ்கிறது. இதற்காக இதன் ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் தனது பலத்தை இந்திய கப்பல் கழகம் இன்னும் அதிகமாக காட்ட வேண்டும். இந்தியக் குழு என்ற உணர்வுடன் நாம் பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் தனது பலத்தை வெளிப்படுத்தி, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். கடல் வளத்தின் சக்தியை, மக்கள் உணர வேண்டும். சரியான தொழில்நுட்பங்கள் மூலம், அதை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். கடல்சார் துறையில் நாம் இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்ட்லா துறைமுகத்திலிருந்து எம்.வி எஸ்சிஐ சென்னை என்ற கப்பலை மத்திய அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கப்பல்  கொச்சி மற்றும் தூத்துக்குடி சென்று, ஏற்றுமதி பொருட்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு கொண்டு செல்லும்.

மத்திய இணையமைச்சர் திரு சாந்தனு தாகூர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய துறைமுகங்களையும், சர்வதேச தரத்தில்  மேம்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம்’’ என்றார்.

இந்திய கப்பல் கழகத்தின் 60 ஆண்டு கால பயணத்தை தெரிவிக்கும் புத்தகத்தையும் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் வெளியிட்டார். இந்திய கப்பல் கழகம் வளாகத்தில் துளசிச் செடியை மத்திய அமைச்சர் நட்டு வைத்தார். அங்கு நடந்த கலை நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760726

*******

 

(Release ID: 1760726)



(Release ID: 1760762) Visitor Counter : 159