பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஷாம்ஜி கிருஷ்ணா வர்மா பிறந்தநாளையொட்டி பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்

Posted On: 04 OCT 2021 10:36AM by PIB Chennai

ஷாம்ஜி கிருஷ்ணா வர்மா பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். ஷாம்ஜி கிருஷ்ணா வர்மாவின் அஸ்தி 2003 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்திலிருந்தும், 2015 ஆம் ஆண்டு தவற விட்ட அவரது சான்றிதழை பிரிட்டனிலிருந்தும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டதையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.

“மாபெரும் புரட்சிகர மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஷாம்ஜி கிருஷ்ணா வர்மாவின் பிறந்தநாளில் அவருக்கு புகழஞ்சலிகள் அடிமைத்தனத்திலிருந்து தேசத்தை விடுவிக்க அவர் தமது வாழ்நாளை அர்ப்பணித்தார். விடுதலைப் போராட்டத்தில் அவரின் பங்களிப்பை இந்த மகத்தான தேசம் ஒருபோதும் மறவாது. ஷாம்ஜி கிருஷ்ணா வர்மா பிறந்தநாளில் அவருக்குப் புகழஞ்சலிகள்.

ஷாம்ஜி கிருஷ்ணா வர்மாவின் அஸ்தி 2003 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்திலிருந்தும், 2015 ஆம் ஆண்டு தவற விட்ட அவரது சான்றிதழை பிரிட்டனிலிருந்தும் இந்தியாவிற்கு மீண்டும் கொண்டுவர எனக்குf; கிடைத்த வாய்ப்பை நான் நற்பேறாராகக் கருதுகிறேன். அவரது துணிவையும், உயர்ந்த பண்பையும் பற்றி இந்திய இளைஞர்கள் அறிவது முக்கியமானதாகும்” என்று தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியுள்ளார்.

********(Release ID: 1760710) Visitor Counter : 229