தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
டி.டி.கஷிர் சேனலில், லடாக்கி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஒரு மணி நேரமாக அதிகரிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2021 4:45PM by PIB Chennai
டிடி கஷிர் சேனலில் அக்டோபர் 1ஆம் தேதி முதல், லடாக்கி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு 30 நிமிடத்தில் இருந்து, ஒரு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ஒளிபரப்பில், லடாக்கி மொழியில் செய்தி மற்றும் நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன.
உள்ளூர் கலாச்சார நடவடிக்கைகள், லடாக் யூனியன் பிரதேச செய்திகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், சமீபத்தில் லே சென்றிருந்த போது, லடாக் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, டிடி கஷிர் சேனலில், லடாக்கி செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அதிக நேரம் வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கு முன்பு, டிடி கஷிர் சேனலில் லடாக்கி மொழி ஒளிபரப்பு மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை இருந்தது. தற்போது கூடுதலாக மதியம் 2.30 மணியிலிருந்து மாலை 3 மணி வரை ஒளிபரப்பப்படும்.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1760390)
வருகையாளர் எண்ணிக்கை : 233